மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டரை வயது மகளை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் மறைத்து வைத்துவிட்டு நாடகமாடிய தந்தையை போலீஸார் கைது செய்தனர். கப்பலூர் உள்ள பிளாஸ்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த பாண்டிசெல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி வனிதா பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களது இரண்டரை வயது மகள் பார்கவி, தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவன். மனைவியிடையே செல்போன் மூலம் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அழுது கொண்டிருந்த மகளை. ஆத்திரத்தில அடித்து கொலை செய்த பாண்டிசெல்வம், சிறுமியின் சடலத்தை சாக்குமூட்டையில் போட்டு தொழிற்சாலைக்குள் மறைந்து வைத்திருந்துள்ளார்.