கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தந்தை உயிரிழந்த நிலையில், மகனை அப்பகுதி மக்கள் உயிருடன் மீட்டனர். பண்டப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள சிவன் கோயிலுக்கு புறப்பட்ட பெங்களூரை சேர்ந்த மடடா லோகிதா மற்றும் அவரது மகன் சாத்விக் , அங்குள்ள பழுதடைந்த குறுகிய தரைப்பாலம் வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக சென்ற காருக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கிய போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.