திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற சிறுவர் சிறுமிகளுக்கான ஃபேஷன் ஷோவில், குழந்தைகள் விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யார நடை போட்டது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குட்டி சுட்டி நிறுவனம், jci ராஜமன்னார்குடி சார்பில் நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில், 1 முதல் 9 வயது வரையில் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு நவ நாகரீக ஆடைகளை அணிந்து மேடையில் ராம்ப் வாக் செய்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.