திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தனியார் மகளிர் கல்லூரியில் நடந்த அலங்கார ஆடை அணிவகுப்பில், குழந்தைகள், மாணவ மாணவிகளின் Ramp Walk பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வஞ்சிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ நடைபெற்றது. 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் குழந்தைகள், மாணவ மாணவிகள் மிடுக்கான தோற்றத்துடன் விதவிதமான ஆடைகள் அணிந்து, ஒய்யார நடைபோட்டு அசத்தினர்