கல் அரவை தொழிற்சாலை (Stone grinding factory:): காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல் அரவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புழுதி மற்றும் புகையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கல் அரவை தொழிற்சாலையில் ஜல்லி கற்கள் அரைக்கும் போது அரவை இயந்திரங்களில் தண்ணீர் தெளிக்காமலே இயக்குவதால் அதிக அளவு புழுதி மற்றும் புகை வெளியேறி விவசாய நிலங்கள் பரவுவதாக கூறும் விவசாயிகள் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர். எனவே புகை மற்றும் புழுதிகள் பரவாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் வீடியோ பதிவு செய்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல்..!