வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுப்பு கிராமத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலையை காட்டுப்பன்றி சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.