தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விலை வீழ்ச்சியால் செண்டு பூக்களை விவசாயிகள் டன் கணக்கில் குப்பையில் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் செண்டு மல்லி சாகுபடி செய்யப்பட்டதால், பூக்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் விலை கிலோ 10 ரூபாய்க்கும் கீழாக சரிந்த பூக்களை வியாபாரிகள் வாங்க முன்வராததால், விவசாயிகள் பூக்களை குப்பையில் கொட்டிச் சென்றனர். இதனைத் தொடந்து பேரூராட்சி பணியாளர்கள் டிராக்டர்கள் மூலம் பூக்களை அள்ளிச்சென்று குப்பைக் கிடங்கில் கொட்டினர்.