டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு திட்ட தொகையை வழங்கவில்லை என கூறி, மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.