ஐடிபிஎல் நிறுவன எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த கோரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐடிபிஎல் நிறுவன எண்ணெய் குழாயை விளைநிலங்களில் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.