கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுரங்க விரிவாக்கத்தை பார்வையிடுவதற்காக சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.