திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் உர தட்டுப்பாடு உள்ளதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடிக்காக விதை நாற்றாங்கால் தயார் செய்தல், நேரடி விதைப்பு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், யூரியா, நுண்ணூட்ட உரம் உள்ளிட்டவற்றிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. உர தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, பூச்சி மருந்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.