நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்கால் முறையாக தூர் வாராததால் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மேட்டூர் அணை நீர் வந்து சேரவில்லை என கூறி நீடூர் பாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் இல்லாமல் குறுவை நெற்பயிர்கள் பாதித்ததாக கூறி நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.