வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி, மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க வேண்டும், கால்வாய் மதகை 62 அடியாக குறைக்க வேண்டும், கால்வாயில் பலம் இழந்த பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.