கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள கிராமங்களில் யானை கூட்டம் வருவதை தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல், குழுக்களாக திரியும் 12 யானைகளின் தாக்குதலால் பாதிக்கப்படுவதால், அவற்றை நிரந்தரமாக விரட்ட வேண்டும் எனவும், மின் வேலி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் எனக் கூறியதால் போலீசார் அவர்களை தடுத்த நிலையில், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.