மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததை கண்டித்து, குறைதீர்வு கூட்டத்தில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டதால் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளை சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முயற்சித்த போதும், அதனை ஏற்காத விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தொடர் மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.