ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை வைத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொம்மன்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் குமாரசாமி ஆகியோர் வளர்த்து வந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 9 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.