புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சொக்கம்பேட்டை பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்மணிகளை கொள்முதல் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடி-பட்டுக்கோட்டை சாலையில் விவசாயிகள் சாலையை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.