கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் காட்டெருமை கூட்டம் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்திற்குள் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், பயிர்களை சேதப்படுத்தியதோடு, அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த காரட்களையும் சாப்பிட்டு விட்டு சென்றன. காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வராத வகையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.