தஞ்சை மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 93ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படும் நெல்மணிகள், கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக திறந்தவெளியில் கிடப்பில் போடப்பட்டு மழையில் நனைந்து சேதமடைவதாக கவலை தெரிவித்தனர். பருவமழை தொடங்க உள்ள நிலையில், நெல்மணிகளை மழையில் இருந்து பாதுகாத்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.