பாசனநீர் விநியோகத்தை முறைபடுத்தக்கோரி பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மடைக்கு 7 நாட்கள் வழங்க வேண்டிய நீரை 2 நாட்கள் குறைத்து 5 நாட்களாக விநியோகிப்பதாக குற்றம்சாட்டிய திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதி விவசாயிகள், திருமூர்த்தி அணையில் பாசனத்திற்காக 21 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் அதனையும் 15 நாட்களாக குறைத்துவிட்டதாக கூறினர். தண்ணீர் வேறு தொழிற்சாலைகளுக்கு திருட்டுத்தனமாக கொண்டு செல்லப்படுகிறதா என.