நாமக்கல் மாவட்டம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இரவு கனமழை பெய்த நிலையில் நாமக்கல் மாவட்டம் வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் நுரையுடன் காணப்பட்டது. மழையின் போது சாயப்பட்டறை கழிவுகளை மர்ம நபர்கள் திறந்துவிடுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இரண்டு கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.