தஞ்சையில் நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய வரவிருந்த மத்திய குழுவினரின் வருகை ரத்தானதால் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த உழவர்கள் அதிருப்தி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை எதிரொலியால், நெல் கொள்முதல் ஈரப்பத சதவீதத்தை தளர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர். அதன்படி தஞ்சை வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.