வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து நீலகிரி மலை பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அதிக காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் உடைய நீலகிரி பூண்டு தற்போது கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.