தென்காசி மாவட்டம் கடையம் அருகே போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகி சேதமடைந்ததால் உழவர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். சம்பன்குளம், சிவசைலம், கருத்த பிளையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் போதிய நீரில்லாமல் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் குமுறுகின்றனர். சிதலமடைந்த வடகுருவ பத்து கால்வாய் மற்றும் சம்பன்குளம் ஆகியவற்றை முறையாக தூர்வாரப்படாததே இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.