தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தேங்காய் விலை உச்சம் தொட்டிருப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் தேங்காய், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ 68 ரூபாய்க்கும் ஒரு டன் 68 ஆயிரம் ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.