நாகை மாவட்டத்தில் வைக்கோல் விற்பனை செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 30 முதல் 35 அளவிலான வைக்கோல் கட்டுகள் கிடைக்கும் நிலையில், விற்பனைக்காக கட்டி வைக்கப்பட்ட வைக்கோல் கட்டுகள் அனைத்தும் விலை போகாமல் வயல்களிலே கிடந்து மக்கி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் வைக்கோல் போர்களை எரிக்கும் நிலை ஏற்படுவதால் வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் அட்டை, காகித தொழிற்சாலையை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.