கடும் வெயில் வாட்டிய நிலையில், காற்றுடன் பெய்த கனமழையால் பொது மக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான வெயில் நிலவிய சூழலில், திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பள்ளி முடிந்த நேரம் என்பதால் மாணவ, மாணவியர் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றனர். இந்த மழை நிலத்தடி நீர் கூடுவதற்கும், வெப்பம் தணிவதற்கும் பயனாக இருக்கிறது என்று பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.