திருச்சியில் காவிரி அய்யாறு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். திருச்சி மாநகரையும்,புறநகரையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கட்டியிருந்த தடுப்புச்சுவர் ஏற்கனவே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சலவைத் தொழிலாளர் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்த நிலையில், தடுப்பணை கட்டக் கோரியும், சலவைத் தொழிலாளர் பயன்பாட்டிற்கு படித்துறை கட்டித்தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது.