தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற விவசாயி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ் ராஜா தோப்புவை சேர்ந்த ஜெயராமன் என்பவர், தமது நிலத்தின் பத்திரத்தை நண்பர் செல்வராஜிடம் கொடுத்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. வெறும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதி பணம் கொடுக்காமல் செல்வராஜ் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார்அளித்தும் நடவடிக்கவில்லை என கூறி, எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற ஜெயராமன், திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதனால் 60 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.