விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காட்டுப்பன்றிகளுக்காக சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தார். லட்சுமணன் என்பவர், கீழ்வையலாமூர் கிராமத்தில் குத்தகை நிலத்தில் பயிரிட்டுள்ள மணிலா பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால், அவற்றை தடுக்க மின் வேலி அமைத்து இரவு நேரத்தில் மின்சாரம் பாய்ச்சி வந்ததாக கூறப்படுகிறது. லட்சுமணின் நிலம் வழியாக தனது நிலத்திற்கு சென்ற பலராமன் என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில், போலீசார் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.