விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். தோட்ட வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூவர், ராக்காச்சி அம்மன் கோயில் அருகே தரைபாலத்தை கடக்க முயன்ற போது வாகனத்துடன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இருவர் நீந்திக் கரையேறினர்.