கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் வயலில் அறுந்துக்கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார். வீட்டில் உள்ள கால்நடைகளுக்காக தனது வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த பொழுது, அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக ராதாகிருஷ்ணன் மிதித்ததாக கூறப்படுகிறது.