திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தமிழனுக்கும் அவரது உறவினர் துரைசாமிக்கும் 15 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரைசாமி குடும்பத்தினர் பிரச்னைக்குரிய நிலத்தில் பயிரிட முயல இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது துரைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் செந்தமிழனை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.