திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். நாகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது தோட்டத்தில் சோதனையிட்ட போலீசார் பூச்செடி மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவே வளர்ந்து நின்ற கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனர்.இதையும் படியுங்கள் : மேல்மலையனூர் கோயிலுக்கு படையெடுத்த பக்தர்கள்... ஆனி அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய சென்ற மக்கள்