கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆவல் சின்னாம்பாளையம் பகுதியில் காரில் இருந்து இறங்காமல் தென்னை மரங்களை ஆய்வு செய்ததாக கூறி, தோட்டக்கலைத்துறை இயக்குநரிடம் விவசாயி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல் காரணமாக தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.