கொலை முயற்சி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார்.