புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்காக பந்தக்கால் நடப்பட்டது.திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள பந்தக்கால் நடப்பட்டது.முன்னதாக பந்தக்காலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.