இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் குடும்பத்தினர், மத்திய அரசை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த ஞாயிறன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரையும், 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.