செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர்கள் சந்தோஷ் -லதா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2023 ம் மீண்டும் கர்ப்பமடைந்த லதா, 3 வது குழந்தை பிறந்தபோது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட லதா, பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்த போது, அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ந்த லதா, செங்கல்பட்டு அரசு மருத்துவனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கதறி அழுதார்