விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் முறைகேடு குறித்து புகார் அளித்த இளைஞர் உள்பட 27 பேரின் குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்ததாக, டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. டி.எடப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அப்துல்லா, ஜமாத் உறுப்பினர்களாக உள்ள அவரது உறவினர்கள் பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக, புகார்தாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முறைகேடு புகார் அளித்த ஜாகீர் உசேன் என்பவரிடம் 38 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்ததாகவும், விலக்கி வைத்த குடும்பங்களை பண்டிகை நிகழ்வுகளில் கூட அனுமதிப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.