காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள அருள்மிகு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் நடத்தி, பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். வெங்கடேஸ்வர குருக்கள் மற்றும் ஜனனி பரத் என்ற அந்த இருவரும், போலி இணையதளம் மூலம் பெறப்படும் கட்டணத்திற்கு கோவில் பிரசாதத்தை அனுப்பி வைத்தது தெரியவந்தது