புதுக்கோட்டையில் உள்ள நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகளை மதுரையை சேர்ந்த BIS என்ற இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். BIS சின்னத்தை பொறித்து போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்டு, ஹால்மார்க் தனித்துவ அடையாள இலக்கம் இன்றி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 643 புள்ளி 36 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.