திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே, அரசு பேருந்து நடத்துனர்களிடம் வசூல் வேட்டை செய்ததாக, போலி செக்கிங் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். கோசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்ற அந்த நபர், செங்கல்பட்டு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலைப்பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்.