விருதுநகரில் உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாகக் கூறி போலி சான்றிதழ் பெற்று, தனது நிலத்தை திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவருக்கு விற்பனை செய்ததாக பெண் ஒருவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் ஜெயராணியின் கணவர் ஜெயராஜிடம் இருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும், அவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.