திருப்பூரில் பழைய பொருட்களை பயன்படுத்தி போலியான செல்போன்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூரில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது உடைந்து போனை சர்வீஸ் செய்வதற்காக கொண்டு சென்றபோது, அவர் கொண்டு வந்த புதிய OPPO செல்போனில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட NOKIA போனின் பேட்டரி உள்ளிட்டவை வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.