தஞ்சை மாவட்டம் செய்யாமங்கலம் கிராம பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், நீர்தேக்க தொட்டி, கோயில் உள்ளிட்ட 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலியான பத்திரம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் எனும் நபர் போலியான பத்திரம் தயாரித்து ”இந்த இடம் எனக்கு தான் சொந்தம்” என்று கூறி பள்ளிக்கூடத்தை இழுத்து மூடுவேன், இந்த பகுதியை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு அந்நபரிடமிருந்து பள்ளிக்கூடம், கோயில் உள்ளிட்ட நிலங்களை மீட்டு தங்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.