சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் பாம் டிடெக்கடர் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூரை சேர்ந்த ஜோதிவேல் என்பவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.