ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர் செயலியில் "AUTO APPROVAL" மூலம் விடுப்பு பெறும் வசதி நவம்பர் 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு கோரும் நாட்களுக்கு முந்தைய மாதத்தில் குறைந்தது 24 நாட்கள் பணிபுரிந்திருக்கும் பட்சத்தில், விடுப்பு தானாகவே Auto approval முறையில் அங்கீகரிக்கப்படும்.