மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரை மிரட்டி 20 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 7ம் தேதி பட்டப்பகலில் புது நகரை சேர்ந்த கலைவேந்தர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர், அவரிடம் கத்தியை காட்டி, பீரோவிலிருந்த 20 ஆயிரம் பணத்தை பறித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவர், ஆசிரியர் வீட்டுக்கு செல்வது, பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடுவது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இதைவைத்து விசாரணை நடத்திய போலீசார், இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்ததுடன், சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட நபரை தேடி வருகின்றனர்