நெல்லை மாவட்டம் பால் கட்டளை பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் ராணுவ வீரரான கனகராஜை கைது செய்து, அவர் பயன்படுத்திய வாள் மற்றும் பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.